முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் லாலு பிரசாத்துக்கு உதவ தொண்டர்கள் செய்த ராஜதந்திரம்?

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி: கால்நடைத் தீவன வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சியின் பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிகார் மாநில முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத்தின் தொண்டர்கள் ஒரு விநோதமான செயலை செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

அதாவது, லல்லு பிரசாத் கடந்த வாரம், கால்நடைத் தீவன வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய தினமே, ராஞ்சியை சேர்ந்த சுமித் யாதவ் என்பவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை திருடியதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் லல்லுவின் தொண்டர்கள் மதன் யாதவும், லஷ்மன் யாதவும் சரண் அடைந்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட இருவரும் லல்லு பிரசாத் அடைக்கப்பட்டிருக்கும் சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.
ஆனால், பணத்தைத் திருடியதாக சரணடைந்த இரண்டு பேரில் மதன் யாதவ், வசதியானவர் என்பதும், இரண்டு மாட்டுப் பண்ணைகள், பெரிய வீடு, எஸ்யூவி கார் வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

திருட்டில் மதன் யாதவுக்கு உதவியதாக லஷ்மண் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதும், லல்லு யாதவுக்கு உதவி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இருவரும் லல்லுவின் உதவியாளர்களா என்று விசாரித்ததில், அவர்கள் உதவியாளர்கள் இல்லை என்றும், ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால், இவர்கள் லல்லு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்ட அதே தினத்தில் சரண் அடைந்திருப்பதும், அதே சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து