முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: கலெக்டர் கே.விவேகானந்தன், வெளியிட்டார்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 57.பாலக்கோடு, 58.பென்னாகரம், 59.தருமபுரி, 60.பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் 61.அரூர் (தனி) ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 2018 கலெக்டர் கே.விவேகானந்தன், வெளியிட்டார்.

வரைவு பட்டியல்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 03.10.2017 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு; 01.01.2018 அன்றைய தேதியை தகுதி நாளாகக் கொண்டு கடந்த 03.10.2017 முதல் 15.12.2017 வரை 18 வயது பூர்த்தியடைந்தோர் மற்றும் விடுபட்டவர்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் பெறப்பட்டு அவை விசாரணை செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் இறந்தோர், குடிபெயர்ந்தோர் இருமுறை பதிவானவர்களில் ஒரு பதிவு ஆகிய இனங்களில் உள்ளவர்களை பெயர் நீக்கம் செய்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பதிவுகளில் திருத்தம் செய்யக்கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களையும் விசாரணை செய்து திருத்தம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

சரிபார்க்கலாம்

நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 2018 தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருவாய் கோட்ட அலுவலங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். புதியதாக சேர்க்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வருகிற 25.01.2018 முதல் வழங்கப்படும். மேலும் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் புதிய வாக்காளர் அட்டையை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழக அரசு கேபிள் டிவி கணினி மையத்தில் ஆதாரமாக தங்களது ஆதார் அட்டையின் நகலை சமர்பித்து வருகிற 25.01.2018 முதல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் மேலும் 8-வது தேசிய வாக்காளர் தின விழா மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடப்படும் எனவும் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கே. விவேகானந்தன், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து