முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்டிங் சராசரியில் பிராட்மேனை சாதனையை முறியடித்த ஆப்கான் வீரர் !

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      விளையாட்டு

காபுல் : ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19-வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரரான பகீர் ஷா, டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரி சாதனையை முறியடித்துள்ளார்.

பகீர் ஷா அபாரம்

சமீப காலமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நன்றாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த அணியின் ரஷித் கான் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதுதவிர முகமது நபி, முகமது ஷசாத், நஜிப் சத்ரான் உள்ளிட்டோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்த அணிக்கு கூடுதல் பலம் அழிக்கும் வகையில் மற்றொரு சாதனையை அந்நாட்டின் 19-வயதுக்குட்பட்ட அணியை சேர்ந்த பேட்ஸ்மேனான பகீர் ஷா படைத்துள்ளார்.

அதிகபட்ச ஸ்கோர்

பகீர் ஷா, 12 முதல்தர இன்னிங்சில் பேட்டிங் செய்து 1096 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 121.77 ஆகும். அவரது அறிமுக போட்டியில் பகீர் ஷா 256 ரன்கள் அடித்து அசத்தினார். இது அறிமுக போட்டியில் ஒரு வீரரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். இதன்மூலம், கிரிக்கெட் ஜாம்பவனான டான் பிராட்மேனின் சாதனையை பகீர் ஷா முறியடித்துள்ளார்.  டான் பிராட்மேன், 80 இன்னிங்சில் 29 சதங்களுடன் 6996 ரன்கள் குவித்துள்ளார. சராசரி 99.94 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் மிகச் சிறந்த சராசரி ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து