முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூயொங் கிளாசிக் டென்னிஸ்: டோமினிக் தெயிமை வீழ்த்திய ஜோகோவிக்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் கூயொங் கிளாசிக் டென்னிஸ் போட்டியில் டோமினிக் தெயிம்-உடனான போட்டியில் நோவாக் ஜோகோவிக் வெற்றி பெற்றார்.

ஜோகோவிக் வெற்றி

கூயொங் கிளாசிக் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற போட்டியில் 14-ம் நிலை வீரரான நோவாக் ஜோகோவிக், நான்காம் நிலை வீரரான டோமினிக் தெயிமை எதிர்கொண்டார். இப்போட்டியின், முதல் செட்டில் ஜோகோவிக் அதிரடியாக விளையாடினார். இதனால் 6-1 என முதல் செட்டை எளிதாக அவர் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஜோகோவிக் ஆதிக்கம் செலுத்தினார். இரண்டாவது செட்டையும் 6-4 என ஜோகோவிக் கைப்பற்றினார். இறுதியில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிக் வெற்றி பெற்றார். 

மேத்தீவ் வெற்றி

கடந்த ஆறுமாதங்களாக காயம் காரணமாக ஜோகோவிக் எந்த போட்டியிலும் வெற்றி பெறாததால தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு போட்டியில், தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் மரின் சிலிக், ஆஸ்திரேலியாவின் மேத்தீவ் எப்டனை எதிர்கொண்டார். இப்போட்டியில், 6-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மேத்தீவ் எப்டன் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து