கடல்வழிப் பாதையை துண்டிப்போம்: சவுதிக்கு ஏமன் கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      உலகம்
Yemen insurgents 2018 01 11

ஹராரே, எங்களை நோக்கி முன்னேறினால் உங்கள் கடல் வழிப்பாதையைத் துண்டிப்போம் என்று சவுதிக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தலைவர் சலே அல் சமாத் கூறியபோது, "ஏமனின் கடற்கரை நகரமான அல் ஹுடைடா நகரத்தை நோக்கி முன்னேறி வருவதை சவுதி கூட்டுப் படைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் சர்வதேச சிவப்பு கடல் பகுதியில் உங்கள் கடல்வழிப் பாதையைத் தூண்டிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.


சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து