முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமீத்ஷா என்ன தந்திரம் செய்தாலும் கர்நாடகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாது - சித்தராமையா

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : அமீத்ஷா என்ன தந்திரம் செய்தாலும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறாது என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சாமராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் நகரில்  நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு முதல்வர் சித்தராமையா பேசியதாவது,

முந்தைய பாஜக ஆட்சியின் போது ஊழலில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று திரும்பியுள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் எடியூரப்பாவை அருகில் வைத்துக் கொண்டு, எனது தலைமையிலான அரசு மீது பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார்.
ஊழல் குறித்து பேசும் அமித்ஷாவுக்கு எடியூரப்பாவின் ஊழல் நினைவுக்கு வரவில்லையா? அதேபோல ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட அமைச்சர்கள் சிறைக்குச் சென்று திரும்பியதும் நினைவுக்கு வரவில்லையா?

அமித்ஷாவே சிறைக்குச் சென்று திரும்பியவர்தான். அதுமட்டுமல்லாது, அமித்ஷா இரண்டு ஆண்டுகள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். பெங்களூரு வந்துள்ள அமித்ஷா, அதிகாலை 3 மணிவரை கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அமித்ஷா எந்த தந்திரங்களில் ஈடுபட்டாலும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களுக்கு மேல் பா.ஜ.க கைப்பற்றாது என்ற அறிக்கை கிடைத்திருப்பதால், அவர் வேதனை அடைந்துள்ளார். - சித்தராமையா

அமித்ஷா எந்த தந்திரங்களில் ஈடுபட்டாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களுக்கு மேல் பா.ஜ.க கைப்பற்றாது என்ற அறிக்கை கிடைத்திருப்பதால், அவர் வேதனை அடைந்துள்ளார். அதனால்தான் எனது அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். தேசியத் தலைவராக இருக்கக்கூடிய அமித்ஷா தனதுகட்சியினர் கூட்டங்களில் மத்திய அரசின் சாதனைகளைக் கூறி, மக்களை சந்திக்க வேண்டும்.

மக்களின் ஆதரவை பெற மத்திய அரசின் சாதனைகளைக் கூறாமல், மாநிலத்தில் மதக் கலவரங்களில் ஈடுபடுங்கள், துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தும் வகையில் கலவரங்களை நடத்துங்கள் என்று கட்சியினருக்கு வழிகாட்டுதல் வழங்குகிறார்.

மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதி குறித்து அமித்ஷா பேசி வருகிறார். மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுக்கும் பணம் யாருடையது? மாநில அரசுக்கு வழங்க வேண்டிய பங்குத்தொகைதானே. அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதியாகும். எனவே, அந்த நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். மத்திய அரசு விடுவிக்கும் நிதியை கேட்க அமித்ஷா இங்கு வர வேண்டுமா? இதை கேட்டு மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிப்பார்களா?

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஒழிந்தால்தான் மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். எடியூரப்பா சிறைக்குச் சென்று வந்தாரே அப்போது கர்நாடகத்தில் எந்தகாலம் இருந்தது என்பதை அமித்ஷாதான் கூற வேண்டும் என்றார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து