முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நமது நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுங்கள்! இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் நாட்டு தொலைநோக்குத் திட்டத்துடன் இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் சர்வதேச இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் மாநாடு நடைபெற்றது. அதில், 23 நாடுகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் கலந்து கொண்டனர். மாநாட்டைத் தொடங்கி வைத்து ஜனாதிபதி பேசியதாவது:

இந்திய வம்சாவளி எம்.பி.க்கள், தாங்கள் வாழும் நாட்டின் தொலைநோக்கு திட்டத்துடன் இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதை எப்படி இணைத்து, செயல்படுத்துவது என்பது குறித்து ஆராய வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்

பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய பண்புகளால் இந்திய ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவே, நாட்டின் வலிமையாகும். அதற்காக, நாம் பெருமை அடைகிறோம்.இதுபோன்ற நாகரிகப் பண்புகளை, இந்தியர்கள் தாங்கள் வாழும் நாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் பண்புகள்தான், அவர்கள் குடிமக்களாக வாழும் நாடுகளில் பொது வாழ்க்கையில் பங்கேற்க வேண்டும் என்ற உந்துதலை இயல்பாகவே அவர்களுக்கு கொடுத்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள், இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறீர்கள்.
இந்த நிலையில், தாங்கள் வாழும் நாட்டின் தொலைநோக்குத் திட்டத்துடன் இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதை எப்படி இணைத்து, செயல்படுத்துவது என்பது குறித்து ஆராய வேண்டும்.

உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியா உள்ளது. இந்தியாவில் ஏராளமான தொழில், முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. அடுத்து வரும் ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்கும். வரும் 2022-ஆம் ஆண்டில், இந்தியா 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில், அதற்குள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

இந்திய வம்சாவளியினர் எந்த நாட்டில் வசித்தாலும், அங்கு பாராட்டத்தக்க அளவில் சாதனை புரிந்து வருகின்றனர். அரசு நிர்வாகம் மட்டுமின்றி, பொறியியல், விவசாயம் உள்ளிட்ட துறைகளிலும் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகம் நிறைந்த சிலிகான் வேலியில், இந்திய வம்சாவளியினர் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இதேபோல், துபை மற்றும் வளைகுடா நாடுகளின் முக்கிய நகரங்களிலும், நியூயார்க், லண்டன், சிங்கப்பூரிலும் இந்தியர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். அதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து