முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும் சட்ட பிரிவை நீக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டுமென்று ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான என்.சந்தோஷ் ஹெக்டே வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஓரினச் சேர்க்கை குற்றம் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2013-இல் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் இருநாள்களுக்கு முன்பு ஒப்புக் கொண்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

இந்திய தண்டனைச் சட்டம் 377-ஆவது பிரிவின்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலியல் உறவு கொள்வது அனுமதிக்கப்படவில்லை. மேலும், அது ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது. ஆனால், இது தவறு என்பதுதான் எனது கருத்து. ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர்கள் வேறு என்ன செய்வார்கள்? எனவே, ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்து குறித்து பதிலளித்த அவர், 'நான் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். மரண தண்டனை விதித்து ஓர் உயிரைப் பறிக்க நமக்கு உரிமை இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், பலரது உயிரைப் பறித்தவர்களுக்குதான் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்றால், அவரால் கொலை செய்யப்பட்டவர்களுக்கு எப்படி நியாயம் வழங்க முடியும்? என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து