மெய்யாத்தூர்,குமராட்சி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      கடலூர்
cuddalure collector

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியம் மெய்யாத்தூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தலைமையாசிரியரிடம் தினந்தோறும் வகுப்பறைக்கு தினசரி நாளிதழ் வழங்கப்பட்டு அதில் உள்ள செய்திகளை மாணவ மாணவிகள் அவ்வபோது படித்து தெரிந்து கொள்கின்றார்களா என கேட்டறிந்தார். மேலும் பள்ளிக்கு வருகைதரும் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள கணினிகள் மற்றும் புரஜொக்டர் சரிவர இயங்குகிறதா என புரஜொக்டரை இயக்கப்பட்டு அதன்மூலம் மாணவ மாணவிகளுக்கு கற்றலின் திறமையை ஒளிபரப்பப்பட்டு காண்பிக்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளிக்கு சுற்றுசுவர் இருக்கிறதா எனவும், கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா எனவும், குடீநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா எனவும் கேட்டறிந்தார்.

கலெக்டர் ஆய்வு

அதன்பின்னர் குமராட்சி ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகை புரியும் புறநோயாளிகள் குறித்த பதிவேட்டினையும், பிரசவம் மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேட்டினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாதந்தோறும் எவ்வளவு பிரசவம் ஏற்படுகிறது, அது முறையாக பதிவு செய்து பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறதா என்றும், பிரசவம் குறித்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்ற தாய்மார்கள் மருத்துவ பரிசோதனை செய்து வேறு மருத்துவமனைக்ளு பரிந்துரை செய்யப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பல் மருத்துவ பிரிவில் நோயாளிக்கு பல் மருத்துவம் சிகிச்சை செய்வதையும், அது குறித்து பல் மருத்துவர்களிடம் தேவையான விவரங்களையும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து ஸ்கேன் அறையினை பார்வையிட்டு ஸ்கேன் இயந்திரம் இயக்கப்பட்டு உபயோகத்தில் உள்ளதா எனவும், அறுவை சிகிச்சை அறையினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் மருந்துகள் இருப்பு அறையினை பார்iவியிட்டு இருப்பு பதிவேட்டில் முறையாக மருந்துகள் குறித்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனவும், இருப்புகள் உள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகை புரிந்துள்ள தாய்மார்களிடம் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் சரியாக கவணிக்கின்றார்களா, மருந்துகள் சரிவர வழங்கப்படுகின்றதா எனவும் கேட்டறிந்தார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி சரிவர வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது சிதம்பரம் வட்டாட்சியர் (பொ) அரங்கநாதன், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பி.சுகுமார் (கி.ஊ), ஊராட்சி ஒன்றிய பொறியாளர் டி.விஜயரகுநாத், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மெய்யாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் வாசு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து