முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது விநியோகத்திட்டம் தொடர்பான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொது விநியோகத்திட்டம் தொடர்பான, மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில் நடைபெற்றது.

கண்காணிப்புக்குழு கூட்டம்

பொது விநியோகத் திட்டத்திற்கான மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிகள் 2017-ன்படி பொது விநியோகத்திட்டம் தொடர்பாக கண்காணித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் கலெக்டர்  விளக்கம் அளித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 2023 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில் 1604 முழுநேர நியாயவிலைக் கடைகள், 416 பகுதிநேர நியாயவிலைக் கடைகள், 3 நடமாடும் நியாயவிலைக் கடைகள் உள்ளன.  இந்நியாயவிலைக் கடைகளின் மூலமாக 9,02,177 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  இதில் 7,76,372 அரிசி பெறும் அட்டைகளும், அந்தியோதனா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் 1,15,228 அட்டைகளும், 8,646 சர்க்கரை அட்டைகளும ,1,733 காவலர் அட்டைகளும் , 198 எப்பொருள் வேண்டா அட்டைகளும் , 10058 ஓய்வூதியர் அட்டைகளும் ,850 அண்ணபூர்னா அட்டைகளும் பயன்பெறுகின்றனர்.  மேலும் முதியோர் ஓய்வூதிய குடும்ப அட்டைதாரர்கள், அந்தியோதனா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்கள் தவிர்த்து, மீதமுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 100 சதவீதம் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.  மாதந்தோறும் 19,027 மெட்ரிக் டன் அரிசி, 628 மெட்ரிக் டன் கோதுமை, 1436 மெட்ரிக் டன் சர்க்கரை, 968 கிலோ லிட்டர் மண்ணெண்ணை, 904 மெட்ரிக் டன் துவரம்பருப்பு, 622 மெட்ரிக் டன் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.

பொது விநியோகத்திட்டத்தின்கீழ் அரசு வழங்கி வரும் அனைத்து பொருட்களும் முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பது குறித்தும், நியாயவிலைக் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்பது குறித்தும், அந்தியோதனா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் வரும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாதந்தோறும் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு, பொது விநியோகம் குறித்து பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வாரந்தோறும் நடைபெறும் குறைகேட்புநாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிலும் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் குறைகளை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.க.காமராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் இராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சரஸ்வதி, மல்லிகா மற்றும் விழுப்புரம் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து