ஆஸ்திரேலிய ஓபனுக்கான தரவரிசை: முதல் இடத்தில் ராபெல் நடால்; ரோஜர் பெடரருக்கு 2-வது இடம்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      விளையாட்டு
Roger - nadal 2017 2 21

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் நடால் முதலிடமும், பெடரர் 2-வது இடமும் பிடித்துள்ளனர். பெண்களில் முகுருசா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

நடால் முதல் இடம்

2018-ம் ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வருகிற 15-ம் தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு தரவரிசை வழங்கப்பட்டு அதன்படி போட்டி அட்டவணை தயாரிக்கப்படும். இதனடிப்படையில் ஆண்கள் ஒற்றையருக்கான பிரிவில் ரபேல் நடால் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

17-வது இடம் ...

நடப்பு சாம்பியன் பெடரர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த வருடம் காயத்தால் நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்து ஆஸ்திரேலிய ஓபனுக்கு திரும்பியதால் பெடரர் 17-வது இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலேப் முதல் இடம்

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் விலகியதால் சிமோனா ஹாலேப் முதல் இடத்தை பிடித்துள்ளார். கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்தையும், முகுருசா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Trisha & Vishaal pair up for new film | Cine Gossips

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து