மாநில அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு ஆணையாளர் அனீஷ் சேகர் பாராட்டு

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      மதுரை
11 mdu news

மதுரை.- மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மாநில அளவில் கேரம் போட்டியில் தங்கம் பதக்கம் பெற்ற மாணவியை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்திய பள்ளிகளில் விளையாட்டு குழுமம், மாநில பள்ளி கல்வித்துறை சார்பில் 63 வது தேசிய கேரம் விளையாட்டுப் போட்டி மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளியில் 27.12.2017 முதல் 30.12.2017 வரை நடைபெற்றது. 14 மாநிலத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழக அணி சார்பில் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பள்ளியை சார்ந்த மாணவி எச்.அஸ்விகா கலந்து கொண்டார். 14 வயதிற்குட்பட்ட கேரம் குழு விளையாட்டுப் போட்டியில் எச்.அஸ்விகா தங்கம் வென்று முதலிடம் பெற்று மற்றும் தனி நபர் கேரம் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார்.
மேலும் 02.01.2018 முதல் 05.01.2018 வரை மும்பையில் நடைபெற்ற சப்ஜூனியர் பிரிவில் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கேரம் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தமிழக அணி குழு போட்டியில் முதலிடம் இடம் பெற்று தங்கம் பதக்கம் பெற்றுள்ளார்.  பரிசு பெற்ற மாணவியை ஆணையாளர் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலர் ராஜேந்திரன், கஸ்தூரிபாய் காந்தி பள்ளி தலைமை ஆசிரியைதிருமதி.முருகேஸ்வரி, கண்காணிப்பாளர் .ரமேஷ், உடன் உள்ளனர். 

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து