நத்தம் அரசு பள்ளியில் புகையில்லா பொங்கல் பற்றிய விழிப்புணர்வு விழா.

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      திண்டுக்கல்
11 dgl news

நத்தம், - திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி சார்பாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகையில்லா பொங்கல் பற்றிய விழிப்புணர்வு விழா நடந்தது. இதில் பேச்சு, கோலம், கட்டுரை, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. இதில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சரஸ்வதி, துப்புரவு ஆய்வாளர் சடகோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஆசிரியைகள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
நத்தத்தில் கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்.
நத்தம், ஜன&12.  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் தமிழ்மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது. கிளைதலைவர் சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகி கணேசன், செயலாளர் வேலுச்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் நயினப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 மணல், செங்கல், கம்பி, சிமெண்ட், போன்ற கட்டுமான பொருட்கள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதைகட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.10ஆயிரத்திற்கு விற்ற மணல் தற்போது 25ஆயிரம் வரை கூடுதலாக விற்கிறது. இதனால் சாதாரண மக்கள் வீடுகட்டும் பணிகள் முடக்கமாகிறது. மேலும் ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் கம்பி கட்டுவோர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். முருகேசன் நன்றி கூறினார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து