முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஞ்சார்வலசை கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் இருமுடிகட்டி சபரிமலை பயணம்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

மண்டபம்,- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை கிராமத்தில் மாலை அணிந்து விரதமிருந்து வந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டனர்.
    ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து இருமுடிகட்டி பாதயாத்திரையாகவும், பயணமாகவும் சென்று ஐயப்பனை வழிபடுவது வழக்கம். மாலை அணிந்தது முதல் மகரஜோதி வரையிலான கால கட்டத்தில் நாள்தோறும் இவ்வாறு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை கிராமத்தில் கார்த்திகை மாத தொடக்கத்தில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் எராளமானோர் நேற்று முன்தினம் சுந்தரவிநாயகர் ஆலயத்தில் குருசாமி ஜெயக்குமார் தலைமையில் ஏராளமானோர் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர்.
    இந்த நிகழ்ச்சியில் குஞ்சார்வலசை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததோடு, ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்களை வழியனுப்பி வைத்தனர். விழாவையொட்டி சுந்தரவிநாயகருக்கு பல்வேறு அபிசேக ஆராதணைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் விநாயாகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து