முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா, ஆப்கான், ஈரான், சிரியா நாடுகளுக்கு செல்லவே வேண்டாம்: மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுரை

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், வெளிநாடு செல்லும் அமெரிக்கர்களுக்கு நான்கு விதமான புதிய கட்டுப்பாடு அறிவுரைகளை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது. தீவிரவாதம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு உலக நாடுகளை மட்டுமல்ல, தன் சொந்த பிரஜைகளையே அமெரிக்க அரசு பயமுறுத்தி வருகிறது. குறிப்பாக இரட்டை கோபுரங்கள் இடிப்பு சம்பவத்திற்கு பின் தீவிரவாதம் என்ற வார்த்தை அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஆழமாக கலந்து விட்டது.

இந்நிலையில் பிற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு ஒரு புதிய அறிவுரையை வெளியிட்டுள்ளது. அதில் பாதுகாப்பு நிலைகளின் அடிப்படையில் பயணம் செய்யும் நாடுகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதல் நிலையில் உள்ள நாடுகளுக்கு சாதாரண முன்னெச்சரிகை நடவடிக்கைகளுடன் செல்லலாம். அதாவது அமெரிக்காவுடன் நேசக்கரம் கோர்த்துள்ள நாடுகளுக்கு முதல்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடா, ஸ்வீடன், குவைத், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன

 2வது நிலையில் உள்ள நாடுகளுக்கு செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இரண்டாம் நிலையில் உள்ளன.

 3வது நிலையில் உள்ள நாடுகளுக்கு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் ரஷ்யா, பாகிஸ்தான், சூடான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இங்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்கள் குறிவைத்து தாக்கப்படுவதால், இந்த நாடுகளுக்கு செல்லும் முன் யோசித்து செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 கடைசியாக நான்காவது நிலையில் உள்ள நாடுகளுக்கு செல்லவே வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகொரியா, ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, லிபியா ஆகிய நாடுகளுக்கு செல்லவே வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்றும் பகிரங்கமாகவே அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து