முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி - 40 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் 100-வது செயற்கைகோள் கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி 40 ராக்கெட் நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், பூமியில் உள்ள இயற்கை வளங்களை ஆராய்தல், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமின்றி, வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.

வெற்றிகரமாக...
எடை குறைந்த செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாகவும், எடை அதிகம் உள்ள செயற்கைக் கோள்களை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாகவும் இஸ்ரோ விண்ணில் ஏவிவருகிறது. அந்த வகையில், 31 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி40 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

கூடுதல் கவனம்...
முன்னதாக, வெப்பத் தகடு கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி39 ராக்கெட்டின் பயணம் தோல்வி அடைந்தது. இதனால்,பி.எஸ்.எல்.வி-சி40 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூடுதல் கவனம் செலுத்தினர். நேற்று காலை 9.29 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. பின்னர் அதி்ல் இருந்து செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.
இதனை சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்தவாறு விஞ்ஞானிகள் கண்காணித்தனர். கார்ட்டோசாட்-2, செயற்கைகோள் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த உடன், வெற்றிகரமாக கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

42-வது ராக்கெட்
இதுகுறித்து இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.சிவன் கூறுகையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் நீண்ட கால உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. எதிர்பார்த்தபடி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, செயற்கைக் கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பங்கேற்ற அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

நேற்று விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட், இஸ்ரோவின் 42-வது ராக்கெட் ஆகும். 2018-ல் இஸ்ரோ அனுப்பும் முதல் ராக்கெட் இது. ராக்கெட் மூலம் நேற்று  விண்ணில் செலுத்தப்பட்ட 31 செயற்கைக்கோள்களில் இஸ்ரோ தயாரித்த, கார்ட்டோசாட்-2, 100வது செயற்கைக்கோளாகும். 710 -கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள்,  பூமியின் மேற்பரப்பை துல்லியமாக  படம் எடுக்கும் திறன் கொண்டது.

25 நானோ செயற்கை...
நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட  31 செயற்கைக் கோள்களில், கார்ட்டோசாட்-2, ஒரு மைக்ரோ செயற்கைக் கோள், ஒரு நானோ செயற்கைக் கோள் ஆகிய மூன்றும் இந்தியாவைச் சேர்ந்தவை. 3 மைக்ரோ செயற்கைக் கோள்கள், 25 நானோ செயற்கைக் கோள்கள் ஆகியவை கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா, பிரிட்டன், அமெரிக்காவைச் சேர்ந்தவை. இந்திய செயற்கைக் கோளான ‘கார்ட்டோசாட்-2’ புவி கண்காணிப்பு பணிக்காக ஏவப்படுகிறது. இது நில வரைபடம் தயாரித்தல், கடலோர நிலங்களின் பயன்பாடு, ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதற்காக துல்லியமாக படம் எடுக்கும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து