ராஜபாளையத்தில்பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறிய அளவிலான பொங்கல் பானை, அடுப்பு, கரண்டி, மற்றம் கரும்பு ஆகியவற்றை துல்லியமாக செய்து சாதனை.

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      விருதுநகர்
12 rjp

ராஜபாளையம், -ராஜபாளையம் நகைக்கடை உரிமையாளர் தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு 1.280மில்லி கிராம் அளவிலான சிறிய அளவிலான பொங்கல் பானை,கரும்பு,அடுப்பு உள்ளிட்ட பொருட்களை செய்துள்ளார்.
ராஜபாளையத்தை  சேர்ந்தவர் சமுத்திரகனி அம்பலபுளி பஜாரில் நகை கடை வைத்துள்ளார்.  தமிழர் திருநாளாம் தைபொங்கல் தினத்தை முன்னிட்டு வாழ்த்தும்  கூறும் வகையில் 1 கிராம் 280மில்லி தங்கத்தில் மூலாம் பூசப்பட்ட வெள்ளியில் கரும்பு,பொங்கல் பானை, கரண்டி, அடுப்பு இப்பொருட்களை  செய்து முடிப்பதற்கு 2நாட்களானது எனவும், பொங்கல் தினத்தன்று அனைத்து மகக்ளும் எல்லா வளம் பெற்று சிறப்புற வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பொருட்களை உருவாக்கி உள்ளதாகவும் என சமுத்திரகனி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து