சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் தேனி கலெக்டர் வெங்கடாசலம் பரிசு வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      தேனி
12 theni news

 தேனி- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   வழங்கினார்.
அரசு தேனி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், ஏ.ஆர்.டி மையம், எச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பில்  இன்று (12.01.2018) சமத்தவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், அரசு தேனி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   வழங்கினார்.
 இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ.பாஸ்கரன்  அரசு தேனி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மரு. ாவுக்கரசு  மாவட்ட வருவாய் அலுவலர்  தி.செ.பொன்னம்மாள்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்  மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்  தி.ஜெசிந்தா  அரசு தேனி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து