முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை வக்பு வாரிய கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை,-மதுரை வக்பு வாரிய கல்லூரியில் முதல்வர் எம்.அப்துல்காதிர் தலைமையில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பொங்கல் படைத்து வழிபட்டனர்.
தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை கே.கே.நகரில் உள்ள வக்பு வாரிய கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி என்.ஜமால் மைதீன் ஏற்பாட்டின் பேரில் நேற்று கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் எம்.அப்துல்காதிர் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட துறையின் தலைவர் இ.தெளலத்பேகம் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் மாணவ, மாணவிகள் பொங்கல் படைத்து கரும்பு வைத்து சமத்துவ பொங்கலை கொண்டாடினார்கள்.
வக்பு வாரிய கல்லூரியில் உள்ள துறைவாரியாக வணிகவியல் துறை, வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பொருளியல், ஆங்கிலம், பிசினஸ் அட்மினிடேஷன், வேதியியல், என்.எஸ்.எஸ்.,என்.சி.சி ஆகிய துறைகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் அந்தந்த துறை கட்டிடங்கள் முன்பாக பொங்கல் வைத்து கரும்பு வைத்து சமத்துவ பொங்கலை நேற்று கோலாகலமாக கொண்டினர். இதில் கல்லூரி முதல்வர் எம். அப்துல்காதிர் கலந்து கொண்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இன்றைய இளைஞர்களின் போக்கு வரவேற்க தக்கதா? வருந்ததக்கதா? என்ற தலைப்பில் இந்த பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த பட்டிமன்றத்தை கல்லூரி முதல்வர் அப்துல்காதிர் துவக்கி வைத்து பேசினார். வரவேற்கதக்கது என்ற அணியின் சார்பில் டி.எம்.எஸ்.மைதீன், குலாம்தஸ்த்கீர், ம.அன்னம்மாள் ஆகிய பேராசிரியர்களும், வருந்ததக்கது என்ற அணியின் மீ.தெளலத் பேகம், மதினா பானு, சிக்கந்தர் ஆகிய பேராசிரியர்களும் வாதாதினார்கள். முனைவர் க.சாகுல்ஹமீது நடுவராக இருந்தார்.
பொங்கல் விழாவின் முடிவில் பேராசிரியர் ஷ.சபிஅகமத் நன்றி தெரிவித்தார். விழாவில் மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து