முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா கலெக்டர் நடராஜன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலெக்டர் முனைவர் நடராஜன் கலந்துகொண்டு கரும்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
 ராமநாதபுரம் சமூகநலத்துறையின் கீழ் இயங்கி வரும் சத்தியா அம்மையார் நினைவு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன்  நேரில் சென்று ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையில் பங்கேற்று, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கரும்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.  அப்போது அவர் பேசியதாவது:- தமிழர்களின் கலாச்சாரமானது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையினை அடிப்படையாக கொண்டதாகும். நம் முன்னோர்கள் அனைவரும் உழவுத்தொழிலை பிரதானமாக கொண்டு வாழ்ந்தார்கள். அந்த வகையில் உழவுக்கு உறுதுணை புரியும் இயற்கையை வணங்கி நன்றி சொல்லும் விதமாகவும், கால்நடைகளை தொழுது நன்றி தெரிவிக்கும் விதமாகவும், சுற்றத்தாருடன் அன்பு பாராட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையிலும் பொங்கல் பண்டிகை , மாட்டுப்பொங்கல், காணுப்பொங்கல் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. 
 அதனடிப்படையில் தமிழர்களின் கலாச்சார திருவிழாவான பொங்கல் பண்டிகையினை ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இராமநாதபுரத்தில் சமூகநலத்துறையின் கீழ் இயங்கி வரும் சத்தியா அம்மையார் நினைவு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  மேலும் காணும் பொங்கல் திருநாளான 16.01.218 அன்று அரியமான் கடற்கரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவர்ந்திடும் வகையில் பல்வேறு கடல்நீர் சாகச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பண்டிகை தினங்களை  மாணவ, மாணவியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் போல கல்வி கற்பதையும் கொண்டாட்டமாக கருதி ஆர்வத்துடன் கல்வி கற்றிட வேண்டும். விஷன் 2022 திட்டத்தின் கீழ் நமது இராமநாதபுரம் மாவட்டத்தினை தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக திகழ செய்வதற்கு  தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதனை இந்த நல்ல நாளில் தெரிவித்துக் கொள்வதோடு அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
 இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் உள்பட அரசு அலுவலர்கள், குழந்;தைகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து