முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோ திட்டங்கள் பாமரர்களுக்கும் பயன்பட வேண்டும் - சிவன் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) அனைத்து திட்டங்களுக்கும் பாமர மக்களுக்கு உபயோகப்படும்படியாக இருத்தல் அவசியம் என இஸ்ரோ புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் தோல்வியை ஒரு பாடமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் முயற்சியை கைவிடக்கூடாது. பிஎஸ் எல்வி-40 செயற்கைக்கோள் மூலமாக இன்றைய இளம் விஞ்ஞானிகளுக்கு இதனை பயிற்சி தளமாக பயன்படுத்தும் திட்டம் உள்ளது. - டாக்டர் சிவன்

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் பி.எஸ்.எல்.வி-40 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு டாக்டர் கே.சிவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இஸ்ரோவின் திட்டங்கள் பாமர மக்களுக்கு உபயோககரமாக இருத்தல் அவசியம். சமீபத்தில் ஓகி புயலால் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற பிரச்சினைகளைக் கையாள ‘பிரம்மன்’ எனும் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், நாம் இனி இயற்கை பேரிடர்களான புயல், சூறாவளி காற்று, சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றை துல்லியமாக கணக்கிட முடியும். இதன் மூலம் மீனவர்கள், பொதுமக்கள் மிகவும் பயனடைவர். இதற்கு இஸ்ரோவின் அதிகாரிகள், ஊழியர்களின் முழு ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன். இளைஞர்கள் எப்போதுமே தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது. தோல்வியை ஒரு பாடமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் முயற்சியை கைவிடக்கூடாது. பிஎஸ் எல்வி-40 செயற்கைக்கோள் மூலமாக இன்றைய இளம் விஞ்ஞானிகளுக்கு இதனை பயிற்சி தளமாக பயன்படுத்தும் திட்டம் உள்ளது. இது விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து