உலக தலைவர்கள் தரவரிசை பட்டியலில் மோடிக்கு 3-வது இடம்

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      இந்தியா
modi 2017 11 01

புதுடெல்லி : சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சுவிட்சர்லாந்து செல்கிறார். இந்நிலையில் கேலப் என்ற சர்வதேச அமைப்பு உலக தலைவர்களின் செல்வாக்கு, செயல்பாடுகள் பற்றிய ஆய்வு நடத்தி உள்ளது.

ஐம்பது நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் உலக தலைவர்களைப் பற்றிய கருத்துகள் கேட்டு கேலப் அமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளார். மூன்றாவது இடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

நான்காவது இடத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, 5-வது இடத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், 6-வது இடத்தில் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் உள்ளனர். 7, 8 மற்றும் 9-வது இடங்களில் முறையே சவுதி, இஸ்ரேல், ஈரான் நாட்டு தலைவர்கள் உள்ளனர். பத்தாவது இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளார


இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து