முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம், கோவை, மதுரை மாவட்டங்களில் விரைவில் 'பஸ் போர்ட்' அமைக்க நடவடிக்கை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : விரைவில் சேலம், கோவை, மதுரை மாவட்டங்களில் பிரம்மாண்டமான நவீன வசதி கொண்ட பஸ் போர்ட் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் இரும்பாலை சாலை சந்திப்பு அருகில் புதிய பாலத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது,

மக்கள் பயன்பாட்டிற்கு...

சேலம் வளர்ந்து வருகின்ற நகரம், மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நகரம். ஆகவே மாவட்டத்திற்கு தேவையான பாலங்கள் கொடுத்தால்தான் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு  மாநகரமாக உருவாக்க முடியும் என்ற கருத்தினை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறியவுடன் அதற்கு ரூ.320 கோடி ஒதுக்கி இன்றைக்கு மிக பிரமாண்டமாய் காட்சியளித்து கொண்டு இருகிறது. அதே போல் ஏ.வி.ஆர் ரவுன்டானவில் இருந்து குரங்கடி சாவடி வரை ஒரு பாலம், திருவாகவுண்டனூர் பாலம் அடிக்கல் நாட்டப்பட்டு நானே திறந்து வைத்துள்ளேன். அப்பாலம் இப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகரத்தின் மையப் பகுதியில் ரயில்கள் செல்லுகின்ற காரணத்தால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதனை தடுக்க செவ்வாய்ப் பேட்டை, முள்ளுவாடி கேட் இரண்டு பாலங்கள் அமைத்துத் தர அம்மாவிடம் கோரிக்கை வைத்தோம். அதனையும் அம்மா நிறைவேற்றி தந்தார். அதேபோல்  இன்றைக்கு பழைய சூரமங்கலத்திற்கு செல்வதற்கு ரயில்வே கீழ் பாலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே கட்டி முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து  வைக்கப்பட்டது.

உயர்மட்ட பாலம்...

இப்போது இரும்பாலை பகுதியில் செகோ சர்வுக்கு அதிகமான லாரிகள் சென்று வருவதனால் போக்குவரத்து சூழ்ந்த மையப் பகுதியாக இந்த சாலை சந்திப்பு இருக்கின்ற காரணத்தினால் உயர்மட்ட பாலம் ஒன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கின்ற காலத்திலே கேட்டோம். இன்றைக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று, இந்த அத்தனை  பாலங்களும், நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அம்மாவிடம் கூறி அத்தனை பாலங்களையும் இன்றைக்கு தேர்வு செய்து  கொடுத்துள்ளார் அம்மா.

பிரதமரிடம் கோரிக்கை....

இதனை எதற்காக  செல்லுகின்றேன். என்றால் இதுவரை யாரும் கண்டுகொள்ளாத சேலம்  மாநகரத்தை அம்மாவின் கவனத்திற்கு எடுத்து சென்றதும்  சேலம் மாநகர மக்கள் கோரிக்கையை ஏற்று இவ்வளவு பாலங்கள் கொண்டு  வரப்பட்டுள்ளது.  அது மட்டும் அல்லாமல் நம்கண்முன்னே அடிக்கல் நாட்டி, நாமே  திறக்கிறோம். அதுவே மிகபெரிய அதிசயம். வரலாற்று சாதனை, சேலம் மாநகரம்  வளர்ந்து வரும் மாநகரம், போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகரமாக உருவாக்கப்படும். இன்றைக்கு இன்னும் ஒரு பாலம் அமைக்கப்படும்போது மேலும் போக்குவரத்து அதிகரிக்கும். ஏனென்றால் இது தேசிய நெடுஞ்சாலை. தினந்தோறும் சென்னை செல்ல கூடிய சாலையாக இருக்கின்ற கரணத்திலே அதிக போக்குவரத்து மிகுந்த சாலை, அதிக கனரக வாகனம் செல்ல கூடிய சாலையாக உள்ளது. எனவே ஒரு  புறவழிச்சாலை வேண்டுமென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.

மத்திய அமைச்சர் உறுதி...

மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சென்னை வந்திருந்த சமயத்தில், அவரிடம் தெரிவித்த போது உடனடியாக நிறைவேற்றி தருவதாக கூறினார். பொது மக்களுக்கு சாலை வசதி மிகவும் அவசியம். இப்போது இருக்கின்ற  வகன போக்குவரத்தை கட்டுப்படுத்த புறவழிச்சாலை அமைக்கப்படும் என்ற உறுதியளித்துள்ள மத்திய அமைச்சர் கட்காரி, சேலம் மாவட்ட மக்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களின் சார்பாக மனமாற, உளமாற இந்நிகழ்ச்சியில்  நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் கேட்டவுடன் அதே இடத்தில் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்

பஸ் போர்ட்...

ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் செய்த சாதனை நம் மனதை விட்டு அகலாது. சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்களை பார்க்கும் போது ஜெயலலிதா நினைவுதான் நமக்கு வருகிறது. அவர் முதலமைச்சராக இருந்த போது பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அளித்த உத்தரவின் பேரில் தான் இந்த பாலங்கள் எல்லாம் இன்று உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு படிப்படியாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல் பிரம்மாண்டமாக நவீன வசதி கொண்ட பஸ் போர்ட் நம் சேலத்திற்கு வரவுள்ளது. மத்திய அமைச்சர் நித்தின்கட்காரி சென்னையில் இதனை அறிவித்தார்.

சேலம், கோவை, மதுரை மாவட்டங்களில் இந்த பஸ் போர்ட் விரைவில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர்  நித்தின்கட்காரிக்கு சேலம் மாவட்ட மக்கள் சார்பாக மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சேலம் மாவட்ட மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தரும் அரசாக அம்மாவின் அரசாக செயல்பட்டு வருகிறது.  இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து