போல்ட் வேகத்தில் 74 ரன்களுக்கு சுருண்ட பாக்.: 183 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி - தொடரை கைப்பற்றியது

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      விளையாட்டு
nz beat pak 2018 1 13

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

டக்வொர்த் லூயிஸ்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இரண்டு போட்டிகளிலும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


பேட்டிங் தேர்வு...

இந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டுனிடினில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் அந்த அணி, 257 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் குப்தில் 45 ரன்னும் கேப்டன் வில்லியம்சன் 73 ரன்னும் ராஸ் டெய்லர் 52 ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ரும்மான் ரேயிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சதாப் கான் 2 விக்கெட்டையும் அஷ்ரப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பாக். தோல்வி...

பின்னர் ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான அசார் அலி ரன் எதுவும் எடுக்காமலும் பஹார் ஜமான் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களின் விக்கெட்டை போல்ட் கபளீகரம் செய்தார். அடுத்து வந்த பாபர் அசாம், 8 ரன்னில் ரன் அவுட் ஆனார். அனுபவ வீரர்கள் முகமது ஹபீஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சோயிப் மாலிக் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றினர். சதாப் கானும் டக் அவுட்டாக, வெறும் 16 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது.

74 ரன்களுக்கு...

கேப்டன் சர்பிராஸ் அகமது பொறுமையாக ஆடினாலும் மறுபக்கம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. அடுத்த வந்த அஷ்ரப் 10 ரன்னிலும் ஹசன் அலி ஒரு ரன்னிலும் முகமது ஆமிர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரேயிஸும் சர்பிராஸும் கவுரவமான தோல்வியை சந்திக்க போராடி வந்தனர். ரேயிஸ் அதிரடியாக ஆடி,14 ரன்கள் சேர்த்தார். இதனால் மிகக் குறைந்த ஸ்கோரில் அவுட் ஆவதில் இருந்து பாகிஸ்தான் அணி தப்பியது. அந்த அணி, 27.2 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி, 183 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பாகிஸ்தானின் மிகக் குறைந்த ஸ்கோர் 43. 1993-ம் ஆண்டு கேப்டவுனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த ரன்னை எடுத்தது. ஒட்டு மொத்தமாக, ஜிம்பாப்வே அணி, மிக குறைந்த ஸ்கோரை எடுத்துள்ளது. 2004-ல் இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் 35 ரன்களில் அந்த அணி சுருண்டது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து