கார்த்தி சிதம்பரம் வீட்டில் எதையும் கைப்பற்றவில்லை - அமலாக்கத் துறை விளக்கம்

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      இந்தியா
karthi chidambaram(N)

 புதுடெல்லி :  டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட ரெய்டில் எதையும் தாங்கள் கைப்பற்றவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியா என்கிற நிறுவனம் அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு நேற்று காலை 7.25 மணிக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். அப்போது சிதம்பரம் வீட்டில் இல்லை. அவரது மனைவி நளினியும், மருமகள் ஸ்ரீ நிதியும் மட்டுமே இருந்துள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஐஎன்எக்ஸ் நிறுவன வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சோதனைகள் கிட்டதட்ட 10.30 மணிக்கும் முடிவடைந்தது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடந்த சோதனையில் எதையும் கைப்பற்றவில்லை. காலை 7.25 மணி முதல் 10.30 மணி வரை சோதனை நடத்தினோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து