முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனக் கடலில் எரிந்து கொண்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல் மூழ்கியது

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், சீனக் கடலில் எரிந்து கொண்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல் மூழ்கியது. ஈரான் கப்பலில் இருந்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணை...

ஈரான் நிறுவனத்துக்கு சொந்தமான பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சரக்கு கப்பல் ஈரான் நாட்டில் இருந்து சுமார் 1,36,000 டன் அளவிலான  கச்சா எண்ணையை ஏற்றிகொண்டு தென் கொரியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. சுமார் 274 நீளமுள்ள இந்த கப்பல் சீனாவின் தொழில்நகரமான ஷங்காயில் இருந்து சுமார் 160 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவில் இருந்து சீனாவின் குவாங்டாங் நகருக்கு சுமார் 64 ஆயிரம் டன் உணவு தாணியங்களை ஏற்றிவந்த ஹாங்காங் சரக்கு கப்பலின்மீது (சீன நேரப்படி) 6-1-2018 அன்று 8 மணியளவில் பயங்கரமாக மோதியது.

முற்றிலும் மூழ்கியது...

மோதிய அதிர்ச்சியில் ஈரான் நாட்டு எண்ணைய் கப்பல் தீப்பிடித்து எரிய தொடங்கியது. கிழக்கு சீனக் கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருந்த எண்ணெய் டாங்கர் தற்போது மூழ்கிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எண்ணெய் டாங்கரில் பணியாற்றிய 32 பேரும் உயிரிழந்து விட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், 30 பேர் இரானியர்கள், 2 பேர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள். "திடீரென வேகமாக எரிந்த" சான்சி கப்பல்  மூழ்கிப் போனதாக சீன ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மோசமான வான்னிலை...

நிலவி வந்த மோசமான காலநிலையில், சுமார் 13 கப்பல்கள் மற்றும் இரானிய கமாண்டோ பிரிவு ஒன்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தன. கப்பலில் யாரும் உயிரோடு இருப்பதற்கான நம்பிக்கை இல்லை என இரானியக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மொஹமத் ரஸ்தட் தெரிவித்தார். ஏற்கனவே கப்பலில் பணியாற்றிய இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஹாங்காங் கப்பலில் பணியாற்றிய அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். இந்த விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை எந்தத் தகவல்களும் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து