முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்:

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெற்றிடும் வகையில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டதுடன் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசின் சார்பில் வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி  ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்மநாயக்கன்பட்டி ஊராட்சி,எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி,எஸ்.கீழப்பட்டி ஊராட்சி, சந்தையூர் ஊராட்சி,எஸ்.மேலப்பட்டி ஊராட்சி,ராவுத்தன்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்கள் வெகு  நடைபெற்றது.இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தலைமை வகித்தார்.உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா முன்னிலை வகித்தார் வகித்தார்.பேரையூர் வட்டாட்சியர் உதயசங்கர்,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சசிகலா ஆகியோர் வரவேற்றனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இம் முகாம்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.பின்னர் மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் நலிந்தோர் உதவித்தொகை,முதியோர் உதவித்தொகை,மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்,வீட்டுமனைப் பட்டாக்கள், பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்ட ரூ.25லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிராமமக்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.இதையடுத்து மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள்  மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டார்.இதனிடையே சில கிராமங்களில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்ததன் பலனாக ஏற்பாடு செய்யப்பட்டஅரசு உதவிகளையும் விழா மேடையிலே அமைச்சர் வழங்கினார்.
இம் முகாம்களில் மதுரை புறநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி, டி.கல்லுப்பட்டி ஒன்றியகழகச் செயலாளர் ராமசாமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணை சேர்மன் டாக்டர்.பாவடியான்,முன்னாள்திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன், திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி யூனியன் சேர்மன் உலகாணி மகாலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, திருமங்கலம் ஒன்றிய கழக துணைச் செயலாளர் சுகுமார்,அம்மா பேரவை வெற்றிவேல், பேரூராட்சி செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம் கட்சி நிர்வாகிகள் வக்கீல்.பாஸ்கரன்,பழனிச்செல்வி ராமகிருஷ்ணன், செல்வமணி செல்லச்சாமி,நாகலட்சுமி, தங்கராஜ்,தர்மர்,பாஸ்கரன், பழனிச்சாமி, பிச்சைமணி,மாசாணம்,பொன்ராஜ்,சாமிநாதன், மீனாலட்சுமி,கோடீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து