முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து வீரர் ஜேசன்ராய் சாதனை 180 ரன்கள் குவித்தார்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஜேசன்ராய் சாதனை படைத்து 180 ரன்கள் குவித்தார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 180 ரன் குவித்ததன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜேசன் ராய் பெற்றார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 119 பந்தில் 107 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), ஸ்டோனிஸ் 40 பந்தில் 60 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன் இலக்கை எடுத்தது. தொடக்க வீரர் ஜேசன்ராய் 180 ரன் குவித்து சாதனை படைத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 151 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஜோரூட் 91 ரன் எடுத்தார்.

180 ரன் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜேசன் ராய் பெற்றார். இதற்கு முன்பு அலெக்ஸ் ஹால்ஸ் 171 ரன் குவித்ததை (பாகிஸ்தானுக்கு எதிராக, 2016) அவர் முறியடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து