முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டி: தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக அஷ்வின் புதிய சாதனை

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சூரியன் : இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகளிடையே செஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஷ்வின் புதிய சாதனை படைத்திருக்கிறார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வீழ்ந்த இந்தியா, 0-1 என, தொடரில் பின் தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், ஜனவரி 13-ம் தேதி செஞ்சூரியனில் துவங்கியது.

போட்டியில் 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ், பேட்டிங் தேர்வு செய்தார். தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். டீன் எல்கர் 31 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய மார்கிராம் 94 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டிவில்லியர்ஸ் 20 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் கேப்டன் டு பிளிசிஸ், அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். அரைசதம் கடந்த அம்லா, 82 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென்ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கேஷவ் மகராஜ் அவுட்டானார். அரை சதமடித்த டு பிளிஸ்சிஸ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்ஆப்ரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் அஷ்வின் 4 விக்கெட்களும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்களும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் 38.5 ஓவர்கள் வீசி 113 ரன் கொடுத்து 4 விக்கெட்களை அஷ்வின் கைப்பற்றினார். இதன் மூலம் செஞ்சூரியன் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசிய 2-வது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார். இங்கிலாந்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் சுவான் 5 விக்கெட் வீழ்த்தியது (2009) இந்த மைதானத்தில் சிறப்பான பந்து வீச்சாக இருந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து