முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு துறைகளில் இந்தியா - இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாதுகாப்பு, விவசாயம் உள்பட 9 ஒப்பந்தங்கள் இந்தியா - இஸ்ரேல் இடையே கையெழுத்தானது.

ஒப்பந்தங்கள்...

ஆறு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவாரத்தையின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இந்திய பிரதமர் மோடி சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, ஓமியோபதி மருந்து உற்பத்தி, விவசாயம், திரைப்படத்துறை, அறிவியல்-தொழில்நுட்பம், சைபர் துறை உள்ளிட்ட 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சிறப்பான ஒத்துழைப்பு

பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா வந்துள்ள எனது நல்ல நண்பரை வரவேற்கிறேன். அவரது வருகை புத்தாண்டு காலண்டரில் சிறப்பான தொடக்கமாக குறிக்கப்படும். இரு நாட்டு நட்புறவு மேம்படுத்துவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வுகளை நடைமுறைப்படுவதற்கான வாய்ப்பாகவே எங்களின் சந்திப்பு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான் இஸ்ரேல் சென்றேன். அப்போது 1.25 பில்லியன் இந்தியர்களின் வாழ்த்துக்களையும், நட்புறவையும் அங்கு எடுத்துச் சென்றேன். திரும்பி வந்த போது இஸ்ரேலிய மக்களின் அன்பு, மரியாதையை ஆகியவற்றை பெஞ்சமின் நெதன்யாகு மூலம் எடுத்து வந்தேன்.
இரு நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்து இரு நாட்டு உறவை தூண்களை போன்று உறவை பலப்படுத்துவோம். விவசாயம், அறிவியல் - தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் விவசாயத்திற்கு இஸ்ரேலிடமிருந்து சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும். பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம், இஸ்ரேலிய நிறுவனங்களின் நேரடி அந்நிய முதலீட்டை இந்திய நிறுவனங்கள் பெற முடியும் என்றார்.

யூதர்கள் நிம்மதியாக...

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில்,

இஸ்ரேலுக்கு வந்த முதல் இந்திய தலைவர் மோடி. அவரின் வருகையால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளை போல் இல்லாமல் இந்தியாவில் வாழும் யூதர்கள் நிம்மதியாக உள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய நாகரீகம், சகிப்புதன்மை, ஜனநாயகம் ஆகியவற்றின் சிறப்பால்தான் இது சாத்தியப்பட்டது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் பயங்கர தாக்குதல் எப்போதும் எங்கள் நினைவில் உள்ளது. எனவே, இந்தியாவுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளோம் . இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து