முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞானி சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் சென்னை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. ஞானியின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி சங்கரன் கடந்த சில மாதங்களாக அவர் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவருக்கு இந்த நோய் அதிகரித்தது. இதனால் வாரத்துக்கு 3 தடவை அவர் டயாலீசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை அவர் வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 63. அவரது உடல் கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும் அஞ்சலி செலுத்தினர்.

ஞானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:-

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞானி (15.1.2018) இன்று (நேற்று) அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். ஞானி, பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மைகொண்டவராக திகழ்ந்தவர். பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவரும், கடின உழைப்பாளியும், அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடிய பண்பாளருமான ஞானியின் மறைவு பத்திரிகை துறைக்கு பேரிழப்பாகும். ஞானி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன்திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து