முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் அண்ணாமலையார் கிரிவலம்: வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் திருவூடல் திருவிழா சிறப்புக்குரியது. சுவாமிக்கும் அம்மனுக்கும் இடையே ஏற்படும் உடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் திருவூடல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

திருவூடல் திருவிழா

அதன்படி நேற்று முன்தினம் இரவு திருவூடல் தெருவில் திருவூடல் விழா வெகுவிமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஊடல் காரணமாக அம்மன் கோவிலுக்கு திரும்பினார். குமரக்கோவிலுக்கு அண்ணாமலையார் சென்றார். அதன் தொடர்ச்சியாக அண்ணாம¬லார் நேற்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணியளவில் குமரக்கோவிலிருந்து புறப்பட்டு கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது 14 கி.மீ. தூரமுள்ள கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி மகாதீபம் முடிந்து கடந்த டிசம்பர் மாதம் 4ந் தேதி கிரிவலம் சென்றார். திருவூடலை முன்னிட்டு நேற்று அண்ணாமலையார் கிரிவலம் சென்றார் பின்னர் அண்ணாமலையார் கோவிலில் மறுஊடல் விழா விமர்சையாக நடந்தது. அப்போது அலங்கார ரூபத்தில் உண்ணாமலையம்மன் சமே அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவை முன்னிட்டு கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து