முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்சபா தேர்தல் வரை கட்சி்க்கு நானே தலைவர் : தமிழிசை

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை :  லோக்சபா தேர்தல் வரை நானே தலைவராக நீடிப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தை நோக்கித் தள்ளப்பட்டது பா.ஜ.க. இதனை பா.ஜ.கவில் உள்ள சிலர் பெரிதும் ரசித்தார்கள்.

அடுத்து வரக்கூடிய தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றால், தலைவரை மாற்றியே ஆக வேண்டும்' என டெல்லிக்குப் புகார் மேல் புகார் மனு அனுப்பினார்கள். இதனையடுத்து, தேர்தல் தோல்வி குறித்து தமிழிசையிடம் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சசிகலா குடும்பத்து ஆதிக்கத்துக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அறிவீர்கள். அந்தக் குடும்பத்துக்கு எதிராக பல சமூகங்களில் இருந்தும் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி வாக்கு சேகரிக்கச் சென்றிருந்தால் கௌரவமான வாக்குகளாவது கிடைத்திருக்கும். எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கத் தவறிவிட்டீர்கள்' எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதற்குப் பதில் கொடுத்த தமிழிசை, தேர்தலில் நிற்கவே வேண்டாம் என தொடக்கம் முதலே கூறிவந்தேன். இந்த இடைத்தேர்தலிலும் பணம்தான் வெற்றி பெற்றது. நான் மட்டுமே வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்தேன். வேறு எந்த முக்கியத் தலைவரும் நமது வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவில்லை' எனக் குமுறியிருக்கிறார். இதன்பின்னர் பேசிய அமித் ஷா, பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை சசிகலா குடும்பம் எடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து நம்மைப் பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். நீங்களும் கடுமையாக விமர்சனம் செய்யுங்கள். தேர்தல் நேரத்தில் தேவைப்படும் எனக் கூறியதாக பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிடும் என்றும்  வருகின்ற 2019 லோக்சபா தேர்தலின்போதும் நான்தான் தலைவராக இருப்பேன். என்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் கிடையாது' எனக் கூறியிருக்கிறார் தமிழிசை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து