முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டை காப்பாற்றுவது நம் அனைவரது கடமையாகும் - முதல்வர் இ.பி.எஸ். - துணை முதல்வர் ஒ.பி.எஸ் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை காப்பாற்றுவது நம் அனைவரது கடமையாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.
உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காலை தொடங்கி  வைத்து பேசினார்கள். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தீங்கு இல்லை...

உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டை தமிழக மக்கள் மட்டுமல்ல. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ரசித்து கொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டு மூலம் காளைகளுக்கு சிறு தீங்கும் நடைபெறுவதில்லை. காளைகளை வளர்ப்பவர்கள் தனது குழந்தைகளை எப்படி பேணிக்காத்து வளப்போமோ அது போலவே தங்களது வீட்டுக்குழந்தைகளாக காளைகளை பேணி காத்து வளர்க்கிறார்கள். இந்த வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நாம் அனைவரும் பேணி பாதுக்காப்பது நமது கடமையாகும். இந்த ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் விளையாட்டு. எனவே அதனை பாதுகாப்பது நமது கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நடத்தும்...

விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அத்தனை தடைகளையும் உடைத்து சட்டபோராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை நடத்தி காட்டியவர் மறைந்த முதல்வர் நம் அம்மா. தற்போது தடைகளை தகர்த்தெறிந்து இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. பாரம்பரிய மிக்க இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அம்மா அரசு உறுதுணையாக இருந்து நடத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்தி வரும் அலங்காநல்லூர் கிராம மக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து