முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் சிறையில் அடைப்பு.

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம்,மண்டபம் பகுதி  மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
 ராமேசுவரம் பகுதியிலிருந்து திங்கள் கிழமை காலையில் 400 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகளிலும்,மண்டபம் பகுதியிலிருந்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும் சேர்த்து 2 ஆயிரக்குத்து மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இவர்கள்  கச்சத்தீவு அருகே பல்வேறு பகுதியில் பிரிந்து சென்று மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்,அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம்  பகுதியை சேர்ந்த பூப்பாண்டிராஜ்,சேதுராமன்,முனியசாமி, ஆகியோர்களின் படகில் சென்ற முத்துக்குமார்,ராயப்பன்,ராமர்,முனியசாமி,கார்மேகம்,ஆப்ராஹிம்லிங்கம்,ராதகிருஷ்ணன்,பாலா,முனியசாமி,பூண்டிராஜ்,முனியசாமி,பாலமுருகன் ஆகிய 12 மீனவர்களையும்,அதுபோல மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு படகில் சென்ற 4 மீனவர்களையும் சேர்ந்து 16 மீனவர்களை கைது செய்தனர்.அதன் பின்னர் இவர்கள் சென்ற 4 படகுகளையும் ,படகிலிருந்து மீன்பிடி வலைகள்,ஜி,பி,எஸ் கருவி உள்பட பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.இதனை தொடர்ந்து கைது செய்ய்யப்பட்ட மீனவர்களை நடுக்கடலில் கப்பலில் வைத்து இரவு முழுவதும் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி நள்ளிரவில் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.அதன் பின்னர் மீனவர்கள் 16 பேரையும் நேற்று காலையில் ஊர்க்காவல்துறை  காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீஸார் 16 மீனவர்கள் மீதும் கடல் வளத்தை அழிக்கூடிய தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்து மீன்பிடித்தாகவும், எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல்துறை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.அங்கு இவ்வழக்கு குறித்து விசாரணை செய்த எம்.எம் ரியால் மீனவர்களை  ஜனவரி  மாதம் 31 ஆம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 16 பேரையும் போலீஸார் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர் பூண்டிராஜ் மருத்துவ கிகிச்சை அளிக்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை:
 இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர் பூண்டிராஜ் உடல் நலம் குறைவற்றவர்.அவர் மதுரை தனியார் மருத்துவ மனையில் அவ்வொப்போது (டையாலிஸ்) கிகிச்சைக்கு சென்று வருகிறார்.இந்த நிலையில் மீனவர் பூண்டிராஜ் நேற்று மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.ஆதலால் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர் பூண்டிராஜூக்கு இலங்கையில் அவர் எடுத்து வரும் கிகிச்சை அளிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து