முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகோய் போர் விமானத்தில் பயணித்த நிர்மலா சீதாராமன்

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற நிர்மலா சீதாராமன், நேற்று சுகோய் 30 ஜெட் ரக போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.

ஜோத்புர் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை சுகோய் போர் விமானத்தில், ஜி-சூட் என்று அழைக்கப்படும் போர் வீரர்களுக்கான ஆடையை அணிந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டார். மேலும் இந்தியாவில் சுகோய் போர் விமானத்தில் பயணிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை முகாம்களுக்கு அதிகமான முறை பயணித்து, அவர்களது செயல்பாடுகளை நேரில் கவனித்து வருகிறார். புவியீர்ப்பு சக்திக்கு எதிராக பணியாற்ற வசதியாக ஜி-சூட் அணிந்த நிர்மலா சீதாராமன், ஆக்ஸிஜன் முகமூடி கொண்ட ஹெல்மெட்டையும் அணிந்து கொண்டு சுகோய் போர் விமானத்தில் பயணித்தார்.

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் தகுதி கொண்ட சுகோய் - 30 எம்.கே.ஐ ரக விமானங்கள், பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை துல்லியமாக தாக்கி அழிக்கவல்லது. முன்னதாக ராணுவ வீரர்கள் அல்லாமல், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோர் இந்த சுகோய் போர் விமானத்தில் பயணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2003ம் ஆண்டு, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் சுகோய் போர் விமானத்தில் முதன் முதலில் பயணித்த முக்கிய நபர் ஆவார். அவரைத் தொடர்ந்து 2016ல், மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜூவும் இந்த பட்டியலில் இணைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து