Idhayam Matrimony

ரயில்களில் லோயர் பெர்த்துக்கு இனி கூடுதல் கட்டணம் வசூலிக்க பரிந்துரை

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ரயில்களில் பண்டிகை காலங்களிலும், லோயர் பெர்த்(கீழ் படுக்கை) கேட்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ரயில்வே வாரியத்திற்கு, கட்டண பரிந்துரை குழு பரிந்துரைத்துள்ளது.

விழாக்காலம் உள்ளிட்ட சீசன் நேரங்களில் இயக்கப்படும் பிரீமியம் ரயில்களில் பிளக்சி பேர் என அழைக்கப்படும் மாறுபட்ட கட்டண முறை பின்பற்றப்படுகிறது. இதுபோலவே விமானங்களில் முன் இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஓட்டல்களிலும் அதிக வசதிகொண்ட அறைகளுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே வசதிக்கேற்ற கட்டணம் என்ற அடிப்படையில் ரயில்களிலும் கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய, கட்டண மறு ஆய்வு கமிட்டியை ரயில்வே வாரியம் அமைத்தது. இக்கமிட்டி தனது அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது. மாறுபட்ட கட்டண முறையை அமல்படுத்தலாம் என அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ரயில்களில் கீழ் படுக்கைகளுக்கு (லோயர் பெர்த்) அதிக கட்டணம் நிர்ணயிக்கலாம். அதிகமான மக்கள் பயணம் செய்யும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களிலும், வசதியான நேரங்களில் இயக்கப்படும் ரயில்களிலும் கட்டணத்தை உயர்த்தலாம். பண்டிகை காலங்களில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். மற்ற மாதங்களில் கட்டணத்தை குறைக்கலாம். உணவு வசதி கொண்ட ரயில்களில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கலாம். அதேசமயம் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை, சேருமிடத்தை அடையும் ரயில்களில் கட்டண தள்ளுபடி அளிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ரயில்வே வாரியம் ஏற்றுக் கொண்டால், அதற்கேற்றபடி ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து