முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியேற்ற கொள்கையில் மாற்றம் எதிரொலி: கடந்த ஆண்டில் அமெரிக்காவிலிருந்து 460 இந்தியர்கள் வெளியேற்றம்

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியேற்றக் கொள்கையில் செய்த மாற்றத்தின் விளைவாக 2017-ல் 460 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதும் அமெரிக்காவின் குடியயேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார். இந்த மாற்றம் அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதலை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் விளக்கம் அளித்தது. இதனைத் தொடர்ந்து குடியேற்றக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது குறித்தான புதிய அறிக்கை ஒன்றை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில், சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் கைது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் சதவீதம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியேற்றக் கொள்கையில் செய்த மாற்றத்தின் விளைவாக 2017-ல் 460 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து