முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு நாட்டு உறவை வலுப்படுத்தியவர் மோடி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் புகழாரம்

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தீவிரவாத அச்சுறுத்தல்களும், அதன் தொடர்ச்சியாக அரங்கேறும் பயங்கரவாத நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும், இரு நாட்டு  உறவை வலுப்படுத்தியவர் மோடி என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இந்தியா - இஸ்ரேல் இடையேயான ஒருங்கிணைப்பு மேலும் வலுவடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


3,000 ஆண்டு கால வரலாற்றில் இஸ்ரேலிய மண்ணில் எந்த ஒரு இந்தியப் பிரதமரின் கால் தடமும் பதிந்ததில்லை. அதனை முறியடித்து இரு நாட்டு நல்லுறவையும் வலுப்படுத்தியவர் மோடி. -- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்

ஆறு நாள்கள் அரசு முறைப் பயணமாக கடந்த 14-ம் தேதி இந்தியா வந்த நெதன்யாகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, அவர் தனது மனைவியுடன் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலைப் பார்வையிட்டார்.

அதன் பின்னர், டெல்லியில் பன்னாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற 'ராய்சினா மாநாட்டை' நெதன்யாகு தொடங்கி வைத்தார். இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நெதன்யாகு பேசியதாவது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேலுக்கு இந்தியப் பிரதமர் மோடி வருகை தந்ததன் மூலம் புதிய அத்தியாயத்தை அவர் படைத்துள்ளார். ஏனெனில் 3,000 ஆண்டு கால வரலாற்றில் இஸ்ரேலிய மண்ணில் எந்த ஒரு இந்தியப் பிரதமரின் கால் தடமும் பதிந்ததில்லை. அதனை முறியடித்து இரு நாட்டு நல்லுறவையும் வலுப்படுத்தியவர் மோடி. மீண்டும் அவர் இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.

இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தல்களும், அதன் பயங்கரவாத நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதனை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்றார் நெதன்யாகு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து