முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்னி குக் வாரிசுகளுக்கு பாராட்டு விழா

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

 கம்பம்,-தேனி மாவட்டம் கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆர்.ஆர்.இண்டர் நேஷனல் பள்ளியில் பென்னிகுக் வாரிசுகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பாராட்டி பேசினார்.கம்பம் ஆர்.ஆர்.இண்டர் நேஷனல் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டி 5 மாவட்ட மக்களின் விவசாய பாசனத்திற்கும் குடி நீருக்கும் தண்ணீர் வழங்கிய ஆங்கிலேயே பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக்கின் வாரிசுகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,தேனி தொகுதி எம்.பி.ஆர்.பார்த்திபன்முன்னாள் எம்.பி.சையதுகான் முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார்,தேனி மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர்,மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம்,மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன்,கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ஜக்கையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாணவர்களின் நடன நிகழ்ச்சி,கரகாட்டம்,சிலம்பாட்டம் நடைபெற்றது.இறுதியாக முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக்  வம்சா வழி வாரிசுகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதி எம்.பி.ஆர்.பார்த்திபன், பள்ளி சேர்மன் ஆர்.ஆர்.இராஜங்கம் ஆகியோர் நினைவுப் பரிசுகள் வழங்கினார்கள்.விழா ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஷ்,வெகு சிறப்பாக செய்திருந்தார்.பள்ளியின் துணை சேர்மன் ஆர்.அசோக்குமார்,பள்ளியின் இயக்குனர் ஆர்.ஆர்.விமலகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து