முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாடுகள் பங்குபெறும் ஹாக்கி போட்டி: ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் : 4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி- ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது.

6-0 என்ற கணக்கில்...

நான்கு நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. 5 நாள் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. நியூஸிலாந்து, இந்தியா, பெல்ஜியம், ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் தொடக்க நாளான இன்று ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டில் எதிர்கொள்ள உள்ள முதல் போட்டி இதுவாகும். இன்று பெல்ஜியம் அணியையும், சனிக்கிழமை நியூஸிலாந்தையும் எதிர்கொள்கிறது இந்தியா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து