முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிவியலும் தொழில்நுட்பமும் வளரவேண்டும் என்றால் நாடுகளிடையே ஒற்றுமை வளர வேண்டும் காமராசர் பல்கலை கருத்தரங்கில் துணைவேந்தர் செல்லத்துரை பேச்சு

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை, -அறிவியலும் தொழில்நுட்பமும் வளரவேண்டும் என்றால் நாடுகளிடையே ஒற்றுமை வளர வேண்டும் என்று மதுரை காமராசர் பல்கலை கழக கருத்தரங்கில் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை பேசினார்.
 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நடத்தும் ஒருநாள் உலகளாவிய ஒற்றுமை மற்றும் சமாதான உறவுக்கான மத நல்லிணக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியர்  ஆண்டியப்பன் பேசும் போது, இத்தகைய கருத்தரங்கம் உலக ஒற்றுமைக்கு அமைதிக்கும், ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இன்றைய உலக சூழ்நிலைக்கு உலக அமைதியும், ஒற்றுமையும் மிகத் தேவையானதாக உள்ளது. ஒற்றுமையும் அமைதியும் இருந்தால் உலகத்தில் சாதனைகள் புரியலாம். பல்கலைக்கழகம் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இதை மக்களிடம் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தரது ஆலோசனைப்படி இதை அமுலாக்கப்படுவதில் முனைப்புடன் செயல்படுவோம் என்பதில் உறுதியளிக்கிறேன் என்றார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர்  பி.பி.செல்லத்துரை தலைமை உரையைத் தொடங்கி பேசியதாவது:-
 ஒற்றுமையும் அமைதியும் வளர்ந்தால் மனிதம் வளரும். மனிதம் பாதுகாக்கப்படும். உலகம் நிறைய போர்களை சந்தித்துள்ளது. அதில் மனித இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் நம்மிடம் நல்ல கருத்துக்கள் பதியப்படவில்லை. சமுதாயத்தைக் காக்க வேண்டும். அறிவும் தொழிற்நுட்பமும் சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் நம்மிடம் உணர்த்தப்படவில்லை. மத ஒற்றுமை, இன ஒற்றுமைகளை வளர்ப்பதில் இன்றைய சமுதாயம் செயல்படவில்லை. அனைத்து மதமும் அன்பை செலுத்து. அனைவருக்கும் உதவி செய். ஆகிய விஷயங்களைத்தான் நமக்கு ஒருங்கிணைந்து போதிக்கின்றன.
அறிவியலும் தொழில்நுட்பமும் வளரவேண்டும் என்றால் நாடுகளிடையே ஒற்றுமை வளர வேண்டும். இதை செயல்படுத்த வாழ்க்கையின் தத்துவமாகிய நலமாக வாழ வேண்டும். மற்றவர்களை நலமாக வாழ வைத்திடல் வேண்டும் என்பதை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கிளாரன்ஸ் மருதையா இக்கருத்தரங்கத்திற்கு வருகை தந்துள்ள கருத்தரங்க விருந்தினர் சம்மி வன்யோயிஅறிமுகம் செய்துவைத்தார். அவர் இக்கருத்தரங்கத்திற்கு எவ்வளவு பொருத்தமானவர் என்பதை தனது உரையில் கூறினார்.
டாக்டர் சம்மி வன்யோயி  தனது சிறப்பு உரையில் மத நல்லிணக்கம் மறறும் உலக அமைதி பேசும் காரியங்களில் நான் இணைவதில் மிக பெருமையாக கருதினார். மிகக் கொடூரமான இனப் படுக்கொலைகளை நினைவுபடுத்தும் நினைவிடங்கள் உலகத்தில் நிறைய உள்ளன. அத்தகைய இடங்கள் இனப்படுக்கொலைகளின் கோரங்களை நமக்கு உணர்த்துகின்றன. பூமியின் நரகவேதனையாக இந்த இனப்படுக்கொலைகள் உள்ளன. கடவுள் நமக்கு இந்த பூமியை சந்தோஷமாக வாழ ஒருவரோடு ஒருவர் இணக்கமாக நல்ல மனங்களோடு வாழ நமக்குக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு மனிதரிடமும் சில ஏக்கங்கள் உள்ளன. இனப் படுகொலைகள் எதனால் என்றால் ஒரு குறிப்பிட்ட இனம் இருக்கக்கூடாது. சிலரை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நடக்கின்றது. உலகம் தழுவிய வாழ்க்கையே அனைவரும் வாழ வேண்டும். அனைவரும் சமம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். குறுகிய எண்ணத்தோடு இருக்கக்கூடாது, நாம் வான்வெளியிலிருந்து பூமியை பார்க்கும்போது நிறம், மதம், இனம், சிறிய, பெரிய வேறுபாடுகள் தெரியாது. பூமி ஒரே பொருளாகத்தான் தெரியும். இந்த உலகத்தை நாம் இத்தகைய உலகளாவிய பார்வையில்தான் பார்க்க வேண்டும். உங்களிடமுள்ள குறுகிய எண்ணங்களை வைத்து எந்த அறிவையும் வளர்த்திட முடியாது. நமக்கு முன்பாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதை நாம் பயன்படுத்த எல்லா வேற்றுமைகளையும் களைய வேண்டும். நேர்மையான உறவுகளை வளர்க்க வேண்டும். இறுதியாக அமைதி வளர வேண்டும் என்றால் நமக்குள்ளே சமாதானம் தேவை. சமுதாய அடிப்படையில் சமாதானம் தேவை. இத்தகைய கோணங்களில் நாம் சமாதானத்தையும் அமைதியையும் அடைந்தால் உலகளாவிய சமாதானமும் அமைதியும் அமையும். என்றார்.முனைவர். புஷ்பராஜ் நன்றி தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து