முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே ஆய்வு

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      கடலூர்

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை,  மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

வளர்ச்சித் திட்டப் பணிகள்

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கொத்தட்டை ஊராட்சி புதுக்குப்பம் கிராமத்தில் ரூ.30.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள  அம்மா பூங்கா கட்டுமானப் பணிகளை கலெக்டர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பூங்காவில் அமைக்கப்படவுள்ள ஜிம் -க்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா மற்றும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கலெக்டர்  உத்தரவிட்டார்.அதன் பின்னர், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்,  கொ.பச்சங்குப்பம் கிராமத்தில்  பிரதான்மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராமின்) திட்டத்தின்கீழ் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் குடியிருப்பினை கலெக்டர் பார்வையிட்டு அப்பயனாளியிடம் கட்டுமானப் பணிகளுக்குண்டான கம்பிகள் மற்றும் சிமெண்ட் ஆகியவை அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளதா எனவும்,  தொகையினை அவ்வபோது வழங்கி வருகிறார்களா எனவும் கேட்டறிந்தார்.   அதற்கு கட்டுமானப் பணிகளுக்கான கம்பிகள் மற்றும் சிமெண்ட் வழங்கப்பட்டு,  வீட்டின் கட்டுமானப் பணிகள் அவ்வபோது முடிவடைவதற்கு தகுந்தாற்போல் உரிய தொகை  வழங்கப்பட்டு வருகிறதா எனவும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்தார்.  அதன்பின்னர், கொ.பச்சங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலெக்டர்  நேரில் பார்வையிட்டு, அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் கற்றலின் திறமையினை பரிசோதிக்கும் வகையில் மாணவ, மாணவிகளை  பாடப்புத்தகங்களை வாசிக்கச் சொல்லியும்,  எழுதச் சொல்லியும் கேட்டறிந்தார்.  அதன்பின்னர், அங்குள்ள புரஜெக்டர் மூலம் மாணவ, மாணவிகளுக்கு  வரலாறு, கணிதம், புவியியல் போன்ற பல்வேறு  பாட பிரிவுகளில் ஒளிபரப்பப்பட்டு வருவதை, புரஜெக்டர் இயக்க சொல்லி அவற்றினை மாணவ மாணவிகள் பார்வையிட்ட பிறகு, நன்கு இதற்கு முன்னர் உங்களுக்கு ஒளிபரப்பப்பட்டு காண்பித்தார்களா என கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து இப்பள்ளியில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு, மாணவ மாணவிகளின் வருகை பதிவேடு மற்றும் பிற பதிவேடுகளை கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தினந்தோறும் வைக்கப்படும் தேர்வுத்தாளினை மதிப்பீடு செய்து பெற்றோர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்து கையெழுத்து பெறப்படுகிறதா என கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து கொத்தட்டை ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பசுமை வீட்டினையும், சின்னகுமட்டி, சில்லாங்குப்பம் கிராமங்களில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்பின்னர், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் வத்தராயன்தெத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு செய்து, 7-ம் வகுப்பு அறையில் மாணவ மாணவிகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடப்புத்தகங்களை படிக்க சொல்லி கற்றிலின் திறமையை பரிசோதனை செய்தார். மேலும், அப்பள்ளியில் 7-ம் வகுப்பு அறையில் கணித பாடத்தில் பெருக்கல் கணக்கினை கரும்பலகையில் எழுதி அதற்குரிய விடையினை மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்து சரியான விடையை கூறிய மாணவ மாணவிகளை பாராட்டி, பாடப்புத்தகங்களை நன்கு படித்ததற்காகவும், கணக்குக்குரிய விடையினை சரியாக சொல்லியதற்காகவும் மாணவ மாணவிகள், உதவி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.அதனை தொடர்ந்து புவனகிரி ஊராட்சி ஒன்றியம் அம்பாள்புரம் ஊராட்சியில் பிரதான்மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராமின்) திட்டத்தின்கீழ் கட்டப்படவுள்ள குடியிருப்பு பகுதியினை கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவதாஸ் (வ.ஊ), சிவஞானம் (கி.ஊ), பொறியாளர்கள் சந்தானகிருஷ்ணன், சுரேஷ், கணேசன், சேரன், ஜெயச்சந்திரன், கல்யாணராமன், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  விமலா (வ.ஊ), மோகன்ராஜ் (கி.ஊ), பணி மேற்பார்வையாளர்கள் முருகானந்தன், ஜெயராமன், தலைமையாசிரியர்கள் டி.ரெஜினா ஜெயமேகனா (கொ.பச்சங்குப்பம்), உதவி தலைமையாசிரியர் பத்மாவதி (வத்தராயன்தெத்து), உதவி ஆசிரியர் என்.பிருந்தா (வத்தராயன்தெத்து) ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து