முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2017 சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது: இந்திய அணி கேப்டன் விராட்கோலி தேர்வு ஐ.சி.சி. அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: கடந்த ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோலி தேர்வு
2017-ம் ஆண்டிற்கான விருதுகளை ஐசிசி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  2017-ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் விராட் கோலி பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டேவிட் ஷெப்பர்டு...
வளர்ந்து வரும் வீரருக்கான விருதை   பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹசன் பெற்றுள்ளார். ஐசிசி உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அணிகளில் சிறந்த வீரருக்கான விருது ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கானுக்குக் கிடைத்துள்ளது. றந்த அம்பேயருக்கான டேவிட் ஷெப்பர்டு விருது மைரஸ் எராஸ்மஸ்க்குக் வழங்கப்படுகிறது.

கோலி பெருமிதம்...
கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சர் கார்பீல்டு சோபர்ஸ் பெயரில் வழங்கப்படும் இந்த விருது கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஐசிசி என்னை தேர்வு செய்தது மிகப்பெரிய கவுரவும் என  விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து