முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்களை கொண்டும் செல்லும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர் : அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய அக்னி - 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவு பாதுகாப்பு சோதனை நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.53 மணிக்கு அக்னி-5 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய இந்த அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த சக்திவாய்ந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது.

50 டன் எடை...

அக்னி-5 ஏவுகணையானது 5,000 கி.மீ தூரம் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை நேற்று அதன் உச்சபட்ச தெலைவான 5,000 கி.மீ இலக்கை சென்றடையும் சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி கடைசியாக அக்னி - 5 சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு செய்யப்பட்ட 4 சோதனைகளும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அக்னி- 5 ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்டுள்ளது.

5 ஏவுகணைகள்...

தற்போது வரை இந்தியாவிடம் 5 அக்னி ஏவுகணைகள் உள்ளன. அதாவது அக்னி-1 ஏவுகணை 700 கிமீ தூரம் சென்று தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. அக்னி-2 ஏவுகணை 2000 கி.மீ தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதேபோல் அக்னி-3 ஏவுகணை 2500 கிமீ தொலைவும், அக்னி-4 ஏவுகணை 3500 கிமீ தொலைவும், அக்னி-5 ஏவுகணை 5000 கிமீ தொலைவும் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து