முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் பாண்ட்யாவை என்னுடன் ஒப்பிட வேண்டாம் முன்னாள் வீரர் கபில்தேவ் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை: ஹர்திக் பாண்ட்யாவை தன்னுடன் ஒப்பிட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

தயாராக வேண்டும்
தேவையற்ற ஆட்ட உத்தியை பின்பிற்றி விக்கெட்டுகளை இழக்கும் பட்சத்தில் பாண்ட்யாவை தம்முடன் ஒப்பிட வேண்டாம் என முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார். பாண்ட்யாவிடம் நிச்சயம் திறமை இருப்பதாகவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அதனை காண முடிந்ததாகவும் கபில்தேவ் கூறினார். ஆனால் ஒவ்வொரு போட்டிக்கும் பாண்ட்யா உளரீதியாக தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாண்ட்யா மோசமாக விக்கெட்டை இழந்ததாகவும் கபில்தேவ் சாடினார்.

ஆல்-ரவுண்டராக...
முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இந்தப்போட்டியில் ஹர்திக் பாண்டா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தினார்.அவரது இன்னிங்ஸை முன்னணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டினர். சிலர் தென்னாப்பிரிக்காவில்  நடந்த போட்டியில் ஆலன் டொனால்ட் பந்துவீச்சை விளாசி 129 ரன்கள் குவித்த கபில்தேவை ஞாபகப்படுத்திவிட்டார்  என தெரிவித்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து