முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முகுருஜா அதிர்ச்சி தோல்வி

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முகுருஜா 2-வது சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

நேர் செட்டில்...
கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை நடந்த பெண்கள் 2-வது சுற்று ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான முகுருஜா (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோற்றார். சீன தைபேயை சேர்ந்த சுவி 7-6 (7-1), 6-4 என்ற நேர் செட் கணக்கில் முகுருஜாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தாமஸ் பெர்டிச்...
21-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியாவை சேர்ந்த வேக்கியை தோற்கடித்தார். மரியா ‌ஷரபோவா (ரஷியா) 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் சுவெஸ்டாவை (லாத்வியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் 6-ம் நிலை வீராங்கனை பிளிஸ்கோவா, சபரோவா (செக் குடியரசு), ஆகியோர் வெற்றி பெற்றனர். உலகின் 19-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) 6-3, 2-6, 6-2, 6-3 என்ற கணக்கில் கார்சியாலோசை (ஸ்பெயின்) வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து