முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் 2-வது நாளாக பாகிஸ்தான் ராக்கெட் வீசி தாக்குதல் பொதுமக்கள் இருவர் பலி

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அத்தமீறி தாக்குதல் நடத்தியது.

குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து சிறிய ராக்கெட் குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் பலியானார்கள்.

2003-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பம் ஆனபின்பும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்து உள்ளது.
ஜம்மு, சம்பா மாவட்டங்களில் சர்வதேச எல்லைப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் கிராமங்களை நோக்கி நேற்று முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் நேற்று முன்தினம் 17 வயது பெண்ணும், பி.எஸ்.எப். வீரர் ஒருவரும் பலியானார்கள், மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 6.40 மணியில் இருந்து ஜம்மு, சம்பா மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா, அர்னியா, ராம்கார் ஆகிய பகுதிகளிலும், 40 அவுட்போஸ்ட் பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சர்வதேச எல்லைப்பகுதிகள் அமைந்துள்ள ஆர்.எஸ்.புரா, அர்னியா, ராம்கார்க் ஆகிய இடங்களில் இன்று காலையில் இருந்தே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 82 எம்.எம்., 52 மார்டர் பாம், தானியங்கி துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவம் தரப்பிலும் தகுந்த பதிலடி தரப்பட்டு நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் சாய்குர்தா பகுதியில், ஒரு பெண்ணும், ஆர்.எஸ்.புரா பகுதியில் ஒரு ஆணும் கொல்லப்பட்டனர். மேலும், சாய்குர்த், ராம் கார்க் பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்” எனத் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து