முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை கண்டுபிடிப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

மெக்சிகோ சிட்டி,  உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீருக்கடியில் ஆராய்ச்சி செய்யும் தொல்பொருள் ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

தி கிரேட் மாயா அக்குபெர் குழுவினர் மெக்சிகோவின் யூகாடன் பெனின்சுலாவில் நீருக்கடியில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் ஆய்வில் இறங்கினர். ஓராண்டு ஆய்வுக்குப் பின்னர் நீருக்கடியில் சேக் அக்டன் மற்றும் துலுமில் உள்ள டாஸ் ஓஜோஸ் என்ற குகைகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த இரண்டு குகைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த நீர்வழிக்குகை சுமார் 347 கி.மீ தூரம் வரை காணப்படுகிறது. இது தான் உலகிலேயே மிகப்பெரிய நீர்வழிக்குகை என்று ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட வருட ஆராய்சிகளுக்கு பிறகு மாயன் பழங்குடியினர் மக்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மிகப்பெரிய நீர்வழிக்குகை இது என்று கருதப்படுகிறது. இந்த பகுதியில் மாயன்கள் வாழ்ந்ததை உறுதி செய்யும் வகையில் சிதிலமடைந்த பாண்டங்கள் மற்றும் எலும்புகள் குகைக்கடியில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த கண்டுபிடிப்பு மாயன்கள் வாழ்ந்த இடம், சடங்குகள், குடியேற்றங்கள் பற்றி தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதவுகிறது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆண்டா கூறியுள்ளார். இந்த நீர்வழிக்குகையின் மூலம் அமெரிக்கர்கள் முதன் முதலில் வந்து தங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதே போன்று மாயன் நாகரிகத்திற்கான சான்றுகளும் கிடைத்துள்ளதாக ஆண்டா தெரிவித்துள்ளார். மாயன்கள் இந்த குகைகளை கடவுளுடன் தொடர்பு கொள்வதற்காக பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அடுத்தகட்டமாக சேன் ஆக்டன் குகையில் உள்ள நீரின் தரத்தை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பயோ டைவர்சிட்டிக்கான வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக இந்த சோதனை நடத்தப்பட உள்ளது.

நீர்வழிக்குகை கண்டுபிடிப்பு திட்ட இயக்குனர் ராபர்ட் இந்த கண்டுபிடிப்பிற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் செலவு செய்துள்ளார். கடைசியில் கண்டுபிடிப்பு சாத்தியமாகிவிட்டதாகவும், இனி இதனை பாதுகாப்பதே அனைவரின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து