முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் திட்டங்களைப் பெற்று மக்கள் வாழ்க்கை தரத்தையும். பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்: கலெக்டர் சி.கதிரவன் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குந்தாரப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசு கள விளம்பரத்துறை தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் ( தருமபுரி - சேலம்) இணைந்து நடத்தும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கள விளம்பரம் இயக்குனரக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் மண்டல இயக்குநர் மா.அண்ணாதுரை தலைமையுரையும், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சி.கதிரவன் நேற்று ( 19.01.2018) துவக்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள், குந்தாரப்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு அதிக மதிப்பெண்கள்; பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளைம்;, பயனாளிகளுக்கு கேஸ் இணைப்புகளையும், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கி விழா பேரூரையாற்றினார்.

மேம்படுத்த வேண்டும்

 

பின்பு கலெக்டர் பேசும்பொழுது:இந்திய அரசு தகவல் ஒலிப்பரப்பு அமைச்சம் கள விளம்பரத்துறை சார்பில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி சமையல் எரிவாயு திட்டம், கிராம மின்சாரமயமாக்கல் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் பிரதம மந்திரி சுரக்ஷா, பீமயோஜனா, ஜீவன் ஜோதி பீம யோஜன உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வு பேரணிகளும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும், வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும், உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக இது போன்ற திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தூய்மை இந்தியா திட்டத்தின் திறந்த வெளியில் மலம் கழித்தல் தவிர்க்கும் வகையில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிக்கொள்ள ரூ. 12 ஆயிரம் நிதி வழங்கி வருகிறது. கழிவறை பயன்பாடு காலம் காலமாக முன்னோர்கள் காலத்திலிருந்து மாறி வருகிறது. நவீன காலத்திற்கேற்;ப நல்ல பழக்க வழக்கங்களுக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். திறந்த வெளி மலம் கழித்தல் மூலமாக பெண்களுக்கு பல்வேறு உபாதைகளும், சிக்கல்களும் வருவதோடு மலம் கழிவில் உள்ள தட்டை புழு மூலம் அதிக பாதிப்பு பெண்களுக்கு ஏற்படுகிறது. தங்கள் வீடுகளில் தனி நபர் கழிப்பறைகள் இல்லாதவர்கள் கழிப்பறைகளை கட்டிக்கொள்ள முன்வரவேண்டும் என கலெக்டர் சி.கதிரவன் பேசினார்.

நிகழ்ச்சியில் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.சுப்புராவ், அறிஞர் அண்ணா கலை கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.டேவிட் அமிர்தராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் சி.கோவிந்தராசு, உதவி செயற்பொறியாளர் கே.முத்துசாமி, சுவார்டு தொண்டு நிறுவன இயக்குநர்கள் வி.எஸ்.எஸ். ஜலாலுதின், மா.ஞானசேகரன், அம்மன் இண்டேன் கேஸ். ஏஜென்சி உரிமையாளர் எஸ்.ராமமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் எம். திவ்யநாதன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.வ.சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு,சேகர், கள விளம்பரத் உதவியாளர் தாமோதரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கள விளம்பரத்துறை அலுவலர் எஸ்.வீரமணி வரவேற்புரையும், கள விளம்பர உதவியாளர் பி.டி. பழனியப்பன் நன்றி தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து